ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

ராக்கான் டிஜிட்டல்  திட்டத்தில் தன்னார்வலர்களாக பதிந்து கொள்வீர்-மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், ஏப் 19– சமூக ஊடகங்கள் வாயிலாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிறு வணிகர்களுக்கு இலக்கவியல் பயிற்சிகளை வழங்கும் தொண்டூழியர்களாக பதிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

மாநில அரசின் இலக்கவியல் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் ராக்கான் டிஜிட்டல் திட்டம் (இலக்கவியல் பங்காளி) பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொது மக்களிடையே குறிப்பாக மூத்த குடிமக்கள் மத்தியில் இலக்கவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த ராக்கான் டிஜிட்டல் திட்டம் உதவி புரியும். நாம் பயிற்றுவிக்கும் தொண்டூழியர்கள் இலக்காக கொள்ளப்பட்ட தரப்பிருக்கு இலக்கவியல்  தொடர்பான பயிற்சியை வழங்குர் என்றார் அவர்.

ஆர்வம் உள்ளோர்  www.rakandigitalselangor.com.my  எனும் அகப்பக்கம் வாயிலாக தொண்டூழியர்களாக பதிந்து கொண்டு  மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்கள் பங்கினை ஆற்றலாம் என மந்திரி புசார் தெரிவித்தார்.

தொழில்நுட்ப திறனும் வர்த்தக நுணுக்கமும் தெரிந்த 1,000 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த ராக்கான் டிஜிட்டல் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று மந்திரி புசார் கடந்த 12ஆம் தேதி கூறியிருந்தார்


Pengarang :