ECONOMYMEDIA STATEMENTSELANGOR

அனைத்து முஸ்லிம்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசாரின் நோன்பு பெருநாள் வாழ்த்து

ஷா ஆலம்  மே 13, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  அனைவருக்கும் குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துகளை  தெரிவித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம், ‘புதிய இயல்பில் கொண்டாடப் பட்டதை போல் இவ்வாண்டும் சற்று மாறுதல்களுடன் கொண்டாட வேண்டிவுள்ளது என்றார்.

 ரம்ஜானை கடந்த ஆண்டை விட சற்று வித்தியாசமாக நாம் அவதானிக்க முடியும் என்றாலும், நோன்பை மேற்கொள்ளும் போது ரம்ஜான் பஜாருக்கு செல்லவும்,  அதனை நடத்தவும் எற்பட்ட  சில  இடையூர்களை ஆக்ககரமான செயலுக்கான முன்னோடியாக எடுத்துக்கொள்ள  வேண்டும்.

ஆனால் நாம் எடுக்கும் ஒவ்வொரு செயலும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் நாங்கள் காண்கிறோம். ரம்ஜான் பஜாரை விடுத்து, கிராமத்திற்குத் திரும்பும் பாரம்பரியத்தை கடைப்பிடிக்காமலோ அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் ஒன்று கூடுவதோ இல்லாமல், முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை மிதமாக கொண்டாட முடியும்.

அதனை  “ நாம் நம்மை காப்போம்” என்ற கொள்கைக்கு ஏற்ப கடந்த ஆண்டு நோன்பு பெருநாளை கொண்டாடி நிரூபித்தோம். மிகவும் சவாலானது என்றாலும்,  நம்முடைய அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தை, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொறுப்பை இதன்வழி காட்ட முடிந்தது, இதனால் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடிகிறது. 

அந்த நேரத்தில், நாம், நமது சொந்த வீட்டில் நமது அன்பான குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன்  பண்டிகையை  கொண்டாடி அனுபவித்தோம். வாட்ஸ்அப் அல்லது ஜூம் வீடியோ அழைப்புகள் மூலம் சொந்த ஊரில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பங்களை தொடர்பு கொண்டும் நமது அன்பை மரியாதையை வணக்கத்தை பரிமாறிக்கொள்ள தவறவில்லை. 

அதே சமயம், கடைசியாக நோன்பு பெருநாள்  கொண்டாடப்படுவது ஷாப்பிங் பற்றி தற்பெருமை காட்டாததன் மூலம் கொண்டாடப்படுவதையும் கண்டேன், அவை நிச்சயமாக மதிப்பு மிக்க பண்பாடாகும்.

 குறைந்த பட்சம், நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) கட்டுப்பாடுகளின் கீழ் நம் நெருங்கிய அண்டை அயலாரிடம், உணர்வுகளை, உணவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு இரக்கம் காட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில் மறந்துவிடாதீர்கள், நான் முன்பு குறிப்பிட்ட பண்புகளின் அடிப்படையில் பெருவாரியான மக்கள் பழைய பழக்கங்களுக்குத் திரும்புவதைக் கண்டேன். 

அலங்கார மற்றும் பொருள் வாங்குவதிலும், பகட்டை காண்பிக்கும் வாழ்வு முறையிலிருந்து ஒதுங்கி நோன்பு பெருநாளின்  உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப, குடும்பம் மற்றும் அண்டை அயலாருடன் இருப்பதை பகிர்ந்துக்கொள்ளும் பழக்கங்களுக்கு திருப்பியுள்ளோம் என்றார்  அவர். 


Pengarang :