PBT

இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்க உலு லங்காட்  மக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், மே 6– கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலு  லங்காட் வட்டாரத்தில் இம்மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்கும்படி வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அம்பாங், பண்டான் இண்டாவில் இம்மாதம் 11ஆம் தேதி  இலவச கோவிட்-19  நடைபெறுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கிலான இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

இந்நோய்த் தொற்று மக்கள் மத்தியில் இன்னும் தீவிரமாக உள்ளது. ஆகவே, வட்டார மக்கள் இலவசமாக நடத்தப்படும் இச்சோதனை இயக்கத்தில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம். சோதனையை செய்து கொள்ளும் பட்த்தில் நாம் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை பெற முடியும் என்றார் அவர்.

வரும் மே மாதம் 8ஆம் தேதி பண்டார் ரிஞ்சிங் சமூக மண்டபம், காஜாங், தாமான் மெஸ்ரா சமூக மண்படம் உட்பட உலு லங்காட் வட்டாரத்தின் ஏழு பகுதிகளில் நடைபெறும் இலவச பரிசோதனை இயக்கத்தில் அப்பகுதி மக்கள் பங்கேற்கலாம் என்றும் இஷாம் குறிப்பிட்டார்.

மே 9ஆம் தேதி பண்டார் பாரு பாங்கி, செக்சன் 7, மண்டபம் மற்றும் கம்போங் பாரு பலாக்கோங் சமூக மண்டபம் ஆகிய இடங்களிலும் பரிசோதனை இயக்கம் நடைபெறும் என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து மே 10ஆம் தேதி அம்பாங் பண்டான் மேவா சமூக மண்டபம், உலு லங்காட் தித்திவங்சா சமூக மண்டபம் ஆகியவற்றிலும் மே 11ஆம் தேதியன்று அம்பாங் லெம்பா ஜெயா மண்டபத்திலும் இப்பரிசோதனை நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு இம்மாதம் 8ஆம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தீவிர கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களை மேற்கொள்ளவுள்ளது.


Pengarang :