ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனையில் 66 பேருக்கு நோய்த் தொற்று கண்டு பிடிப்பு

ஷா ஆலம், மே 11– இரு சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட கோவிட்-19 சோதனையில் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 66 பேரில் ஏறக்குறைய அனைவரும் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் கொண்டிராதவர்கள் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி  முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

டுசுன் துவா சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பங்கேற்ற 733 பேரில் 13 பேர் நோய்த் தொற்றைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

அதேசமயம், தெராத்தாய் தொகுதியில் நடைபெற்ற சோதனையில் 1,267 பேர் பங்கேற்ற வேளையில் அவர்களில் 53 பேருக்கு நோய் கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஏறக்குறைய அனைவரும் நோய்க்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை. நோய்க்கான அறிகுறி இல்லாதவர்கள் மூலம் சமூகத்தில் நோய்ப் பரவல் அதிகம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்று அவர் சொன்னார்.

ஆகவே, மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்தகைய இலவச கோவிட்-19 பரிசோதனைகளில் பங்கேற்பதன் மூலம் நோய்த் தொற்றை அடையாளம் காணவும் பிறருக்கு பரவுவதை தடுக்கவும் இயலும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :