ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

கொலம்பியா அடுக்குமாடி குடியிருப்பு நோன்பு பெருநாளுக்கு முன்னதாகவே சீரமைக்கப்பட்டது

ஷா ஆலம், மே 11– உலு கிளாங், தாமான் கிராமாட் ஏயு 2, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பின் கூரைகளை பழுது பார்க்கும் பணி நோன்பு பெருநாளுக்கு முன்னதாகவே  முற்றுப் பெற்றுள்ளது.

கொலம்பியா பிளாட்ஸ் என அழைக்கப்படும் அந்த குடியிருப்பில் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உண்டான செலவுகளை சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகமே (பி.கே.என்.எஸ்.) ஏற்றுக் கொண்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கூரைகளை பழுதுபார்க்கும் பணி நோன்பு பெருநாளுக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்து விட்டது. இது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி ஏற்பட்ட கடும் புயலுடன் கூடிய அடைமழையில் அந்த குடியிப்பின் கூரைகள் பறந்தன. மறுநாள் சம்பவ இடத்திற்கு விரைந்த மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு முன்னதாக கூரைகளை பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்திருந்தார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ள 50,000 வெள்ளி முதல் 60,000 வெள்ளி வரை செலவு பிடிக்கும் எனவும் அவர் மதிப்பிட்டிருந்தார்.


Pengarang :