Ketua Polis Daerah Petaling Jaya Asisten Komisioner Nik Ezanee Mohd Faisal Foto BERNAMA
NATIONALSELANGOR

சட்டத்தை அமல்படுத்துவதிலும் போலீஸ் படை பச்சாதாபத்தையும் மனித நேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்

கோலாலம்பூர், மே 13 – சமூகத்திற்கு சேவைகளை வழங்குவதிலும், சட்டத்தை அமல்படுத்துவதிலும் போலீஸ் படை பச்சாதாபத்தையும் மனித நேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்.ஏ.சி நிக் எசானி மொஹட் பைசல் தெரிவித்தார்.

நேற்று பெர்னாமா டிவியின் பேட்டியில் பேசினார்,  அவர் ‘’பேட்ஜை’’ போலீஸ் சின்னத்தை, மனிதமயமாக்கும் கருத்து தேசிய பாதுகாப்பு படையாக பணியாற்றும் ஒவ்வொரு காவல்துறை அதிகாரி மற்றும் பணியாளர்களிடமும் இருக்க வேண்டும் என்றார்.

“இதற்கு முன் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவராக தான் பதவியேற்றபோது, ​​அத்தகைய கருத்துடன் செயல் பட்டேன், படையையும் சமூகத்தில் செயல் படுத்தினேன். “இதனால், போலீசுக்கு  பொதுமக்கள் வழங்கிய பல்வேறு தகவல்கள் மூலம் அவர்களின் ஒத்துழைப்புடன்  மிகவும் வெற்றிகரமான கூட்டாண்மை அடையப்பட்டுள்ளது.

“எடுத்துக்காட்டாக, மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள ஒரு பெரிய அளவிலான மருந்துகளும், பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதனுடன் தொடர்புள்ளவர்களின் கைதுக்கும் வழியமைத்தது என அவர் நேற்று பெர்னாமா டிவியின் பேட்டியில் பேசினார்.

போலீஸ் நடவடிக்கைகளின் வெற்றி காவல்துறையின் மீதான நல்ல பிம்பத்தை மீண்டும் ஏற்படுத்தும், ராயல் மலேசியா காவல்துறை (ஆர்.எம்.பி) மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்றார்.

போலீசாக எங்கள் கடமைகளைச் செய்வதில், வயதானவர்களுக்கு சாலையைக் கடக்க உதவுவது, பொருட்களை எடுத்துச் செல்வதில் உதவுவது, கடன் கொடுப்பது அல்லது கார் டயர்களை மாற்றுவது போன்ற ஒரு மனிதாபிமான அணுகுமுறையும் தயவும் நமக்கு இருக்க வேண்டும்.

“இது காவல்துறையின் வேலை அல்ல, ஆனால் அதில் எந்தத் தவறும் இல்லை, ஏனென்றால் நாங்கள் நல்லதைச் செய்வதன் மூலம் படைக்கு நன்மதிப்பைச் சேர்ப்போம்,” என்று அவர் கூறினார்.

சில தரப்பினரின் அவமதிப்புகளால் படை ஒருபோதும் புண்படுத்தப் படவில்லை. “நாங்கள் சரியானவர்கள் அல்ல என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் நாங்கள் (காவல்துறை) சமூகத்திற்கு சிறந்த சேவைகளை வழங்குவதாக உறுதிமொழி எடுத்துள்ளோம்.

எங்கள் பலவீனங்களை சரிசெய்வதை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம், ”என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :