KUALA LUMPUR, 1 Nov — Ketua Pengarah Agensi Anti Dadah Kebangsaan (AADK) Datuk Seri Zulkifli Abdullah (berdiri, dua kiri) melihat sebahagian penagih dadah yang ditahan dalam Ops Perdana di Kompleks Kementerian Dalam Negeri malam tadi. Hasil operasi itu, AADK menahan seramai 95 lelaki dan 13 perempuan kerana disyaki positif dadah. –fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA
ECONOMYNATIONAL

நோன்புப் பெருநாள்- போதைப் பித்தர் மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்களை குடும்பத்தார் சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், மே 8- நோன்ப்பு பெருநாளின் போது போதைப் பித்தர் மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்களை சந்தித்க அவர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தில் தங்கியுள்ளவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் நோன்ப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பினை வழங்கும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்படுவதாக நாடா எனப்படும் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் கூறியது.

சமூகத்திற்கும் அந்த நாடா அமைப்புக்குமிடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறுவதற்கு இந்த அனுமதி வழி வகுக்கும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது.

வருகையாளர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வருகையை முன்கூட்டியே தொலைபேசி, குறுந்தகவல், புலனம் உள்ளிட்ட தகவல் சாதனங்கள் வாயிலாக உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் கூறியது.

தங்கள் குடும்ப உறுப்பினரை சந்திக்க ஒவ்வொருக்கும் 30 நிமிட கால அவகாசம் வழங்கப்படும் என்று ஒரு சமயத்தில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.


Pengarang :