ECONOMYNATIONAL

பொது முடக்கத்திற்குப் பின்னர் சிலாங்கூர் சுக்மா விளையாட்டாளர்ளுக்குப் பயிற்சி

ஷா ஆலம், மே 8- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்தப் பின்னர் சுக்மா போட்டி பங்கேற்பாளர்களுக்கு ஓரிட பயிற்சியை வழங்க சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் திட்டமிட்டுள்ளது.

விளையாட்டாளர்கள் தாங்கள் பங்கேற்கும் விளையாட்டுகளைப் பொறுத்து தனித்தனி தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுவர் என்பதோடு அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சிகளை மேற்கொள்வர் என்று சுக்மா எனப்படும்  மலேசிய விளையாட்டுப் போட்டியின் நிர்வாக இயக்குநர் முகமது நிசாம் மர்ஜூகி கூறினார்.

பயிற்சியில் பங்கேற்பதற்கு முன்னர் அனைத்து விளையாட்டாளர்களும் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி காலத்தின் போது அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

ஓரிட பயிற்சியை நோன்பு பெருநாளுக்கு பின்னர் மேற்கொள்ள நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அதற்கான இடத்தையும் தேர்வு செய்திருந்தோம்.எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த முடிவை  ரத்து செய்ய நேர்ந்தது என்றார் அவர்.

 


Pengarang :