MEDIA STATEMENTNATIONALSELANGOR

மூன்றாம்  கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் பிரமாண்ட தடுப்பூசி மையங்கள் அதிகளவில் திறக்கப்படும்

கோலாலம்பூர், மே 5– தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கை அமலாகும் போது ஒரு நாளில் இரண்டாயிரம் பேர் வரை தடுப்பூசி பெறும் அளவுக்கு பிரமாண்டமான தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகளவில் திறக்கப்படும்.

தலைநகர், புத்ரா வணிக மையத்தில் அத்தகைய பிரமாண்ட தடுப்பூசி செலுத்தும் மையம் திறக்கப்பட்டுள்ளதாக தேசிய  கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைச் செலுத்துவதற்காக இன்று திறக்கப்பட்ட அந்த மையத்தில் நாளொன்றுக்கு 2,468 பேர் தடுப்பூசியைப் பெற முடியும் என்று அவர் சொன்னார்.

அதிக அளவிலான தடுப்பூசிகள் நாட்டிற்கு வந்தவுடன் மேலும் அதிகமான பிரமாண்ட தடுப்பூசி மையங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இங்குள்ள உலக வாணிக  மையத்தில் கோவிட்-19 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள மலேசியர்கள் மற்றும் அந்நிய நாட்டினருக்கு அஸ்ட்ராஸேனோக தடுப்பூசியை செலுத்துவதற்காக திறக்கப்பட்ட நான்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களில் புத்ரா உலக வாணிக மையமும் ஒன்றாகும்.


Pengarang :