Polis melalui Unit Dron Pasukan Gerakan Udara (PGU) menggunakan dron bagi mengawal dan memantau pergerakan orang awam sepanjang tempoh Perintah Kawalan Pergerakan (PKP). Grafik Sumber: RMP Drone Unit
ECONOMYPBTSELANGOR

ரமலான் சந்தைகளைக் கண்காணிக்க டிரோன் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர்,  மே 5- தலைநகரில் உள்ள ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய அரச மலேசிய போலீஸ் படை டிரோன் சாதனத்தைப் பயன்படுத்துகிறது.

டேசா பண்டான் ரமலான் சந்தையில்  நேற்று  டிரோன் சாதனம் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது பெர்னாமா செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில்  தெரியவந்தது.

அந்த டிரோன் சாதனம் வானத்தில் வட்டமடித்தபடி கண்காணிபை மேற்கொண்டதோடு அதில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கையும் நினைவூட்டலும் விடுக்கப்பட்டன.

நோன்பு பெருநாள் முடியும்வரை போலீசார நேரடியாகவும் டிரோன் சாதனம்  வாயிலாகவும் ரமலான் சந்தைகளில் சோதனையை மேற்கொள்வர் என்று டாங் வாங்கி  மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைனால் அப்துல்லா கூறினார்.

 


Pengarang :