ALAM SEKITAR & CUACAPress StatementsSELANGORYB ACTIVITIES

வடிகால்,நீர் விநியோகப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை- புக்கிட் லஞ்சான் உறுப்பினர் கூறுகிறார்

ஷா ஆலம், மே 3–  வட்டார மக்களின் தலையாய பிரச்னைகளாக இருந்து வரும் வடிகால், நீர் விநியோகம் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பதை புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் முக்கிய இலக்காக கொண்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் தொடங்கி அதிக வருமானம் பெறும் தரப்பினர் வரை அனைத்து நிலையிலான மக்களிடமிருந்தும் தாம் பல்வேறு புகார்களைப் பெற்று வருவதாக கடந்த 2008 முதல் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் எலிசபெத் சொன்னார்.

நாட்டில் உள்ள மூன்று மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக இத்தொகுதி உள்ளதால் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, கெப்போங், சுங்கை பூலோ, செலாயாங் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் சுமார் மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

சுங்கை பூலோ, கம்போங் டேசா அமானில் வெள்ள நீர் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதோடு மட்டுமின்றி சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்ய செலாயாங் ஜெயா மற்றும் செலாயாங் உத்தாமாவில் பழையை நீர்க் குழாய்களை மாற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.

கெப்போங், வங்சா பெர்மாய், சியாரா மாஸ் ஆகிய பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதும் தமது தலையாய பணியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தொகுதியில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்களைக் கட்டுவதற்கான தேவை இருந்த போதிலும் அதற்கான நீதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று அவர் சொன்னார்.

இவை தவிர மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் நடைபாதை மற்றும் படிகட்டுகளில் சோலார் விளக்குகளைப் பொருத்துவதற்கு தேவையான நிதியைத் திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர தெரிவித்தார்.

 


Pengarang :