ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

388 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மாநில அரசின் சோதனையின் வழி கண்டறியப்பட்டன

ஷா ஆலம், 12 மே: கடந்த சனிக்கிழமை முதல் நான்கு நாட்களில் எட்டு மாநில சட்டமன்றங்களில் (DUN) மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச நோய்த்தொற்று சோதனையின் வழி மொத்தம் 388 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன.

 காஜாங், செமிஞ்சி, சுங்கை ராமால், பாலக்கோங், தெராத்தாய், டூசூன் துவா, பாண்டன் இண்டா மற்றும் லெம்பா ஜெயா மாநில சட்ட மன்றத் தொகுதிகளில் பரிசோதிக்கப்பட்ட 8,585 நபர்களிடமிருந்து முடிவுகள் பெறப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார். 

நாம் நோய்ப்  பீடித்தவர்களாகவோ அல்லது பீடித்ததை அறியாமலோ இருக்கலாம், ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் கவனித்துக் கொள்வது நமது பொறுப்பாகும், குறிப்பாக முதியவர்கள் போன்ற விரைவாக நோய்த்தொற்றுக்கு இலாக்காகும் பிரிவினரின் நலன் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும்.

 “ஹரி ராயா நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, ​​சிலாங்கூர் மக்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நினைவூட்டப் படுகிறார்கள்” என்று டத்தோ ‘ஶ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் வழியாக தெரிவித்தார்.

 சமுதாய நோய்த்தொற்று சோதனைகள் தொடரும் என்றும், அந்தந்த சட்டமன்றங்களில் நடக்கும் தொற்று சோதனைகளில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

 ” உங்கள் கைப்பேசிகளில் செலாங்கா செயலியை பதிவிறக்கம்   செய்து  பயன்படுத்தும்படி  கேட்டுக்கொண்ட அவர். அது ‘ சுய ஆரோக்கியத்துக்கும், இலவச நோய்த் தொற்று சோதனைகளுக்கு ‘பதிவு செய்யவும் மிக உகந்தது” என்று அவர் கூறினார். 

சிலாங்கூர் அரசாங்கம் மே 8 முதல் ஜூன் 10 வரை அனைத்து 56 மாநில சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச நோய்த் தொற்று சோதனைகள் மூலம் கோவிட் -19 கண்காணிப்பு திட்டத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.  

கோவிட் -19 தொற்றுநோயைக் குறைக்கும் நோக்கம் கொண்ட இத்திட்டம் இந்த மாநில மக்களுக்கும், நோய்த்தொற்று ஆபத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள், மற்றும் நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல் நிலை மேம்பாடு குறித்து அக்கறை கொண்டு மாநில அரசால் செயல் படுத்தப்படும் திட்டமாகும் என்றார் அவர்.


Pengarang :