ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19ல் இறந்தவர் வாரிசுக்கு வெ. 1,000 நிதி- மாற்றுத் திறனாளிகள் வெ.500 பெறுவர்

ஷா ஆலம், ஜூன் 9– சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் வாரிசுக்கு ஆயிரம் வெள்ளி மரண சகாய நிதியாக வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உறவுகளைப் பிரிந்த குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கூறிய அவர், இந்தி மரண சகாய நிதித் திட்டத்தை அமல் செய்ய 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இது தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக 500 வெள்ளி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ஆறு லட்சம் வெள்ளி செலவில் இத்திட்டம் அமல் செய்யப்படுகிறது என்றார் அவர்.

551.56 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கித்தா சிலாங்கூர் 2.00 உதவித் திட்டத்தை அறிவித்த போது அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.


Pengarang :