Hee Loy Sian ketika di temubual SelangorKini selepas Majlis Perasmian Kemudahan Lampu Solar Di Kampung Orang Asli Negeri Selangor di Dewan Orang Ramai Kampung Orang Asli Jambu, Dengkil pada 27 Ogos 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பூர்வக்குடியினர் கேன்சினோ தடுப்பூசியை செப்டம்பர் முதல் பெறுவர்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- சிலாங்கூரில் உள்ள பூர்வக்குடியினர் சீன நாட்டுத் தயாரிப்பான கேன்சினோ வகை தடுப்பூசிகளை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி பெறுவர்.

ஊசியைக் கண்டு பயப்படும் மற்றும் கிராமங்களை விட்டு அரிதாக வெளியேறும் பூர்வக்குடியினருக்கு ஒரு தடவை மட்டுமே செலுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசியே பொருத்தமானது என்று பூர்வக்குடியினர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்  கூறினார்.

பைசர் அல்லது சினோவேக் தடுப்பூசிகள் அவர்களுக்கு பொருத்தமாக அமையாது. ஆகவே, கேன்சினோ தடுப்பூசியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். அவர்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டி ஒரே தடவையில் தடுப்பூசியை செலுத்தி விட முடியும் என்றார் அவர்.

தங்கள் பதிவின்படி 20,000 பூர்வக்குடியினர் மாநிலத்தில் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

தொழில்நுட்பம் குறித்த அறியாமை மற்றும் இணையச் சேவை பிரச்னை ஆகிய காரணங்களால் பூர்வக்குடியினர் இணையம் வழி தடுப்பூசிக்கு பதிந்து கொள்வது மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.


Pengarang :