ECONOMYHEALTHPBTSELANGOR

மக்களுக்கு உதவுவதில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கிறது

சபாக் பெர்ணம், ஜூன் 11– கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் சிலாங்கூர் மாநில அரசு எப்போதும் ஒரு படி மேலே நிற்கிறது என்று சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு அரசியல் வேறுபாடின்றி எதிர்க்கட்சி தொகுதிகளும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

நமது சிலாங்கூர் சித்ததாந்தம் நாம் அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக அமைந்துள்ளது. மக்களின் சுமையைக் குறைப்பதில் நாம் முடிந்த அளவு உதவி செய்கிறோம். உணவுக் கூடை உதவித் திட்டம் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு சான்றாக அமைகிறது என்றார் அவர்.

மக்களின் நலன் பேணப்படுவதற்கும் அவர்களின் உரிமைகள் காக்கப்படுவதற்கும் ஏதுவாக அனைத்து தொகுதிகளும் பயன்பெறும் வகையில் திட்டங்களை அமல்படுத்தியதற்காக மந்திரி புசார் அவர்களுக்கு நான் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூர் மாநில மக்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பெரும் செலவில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருவதாக மாநில சட்டமன்ற சபாநாயகருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :