ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்கள் பரிவு உதவித் திட்ட மனு நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம்- அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 14- பி.பி.ஆர். எனப்படும் மக்கள் பரிவு உதவித் திட்டத்திற்கான  விண்ணப்ப  மனு நிராகரிக்கப்பட்டவர்கள்  இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி மேல் முறையீடு செய்யலாம் என்று நிதியமைச்சர் துங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன்  உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் இந்த மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கலாம் என அவர் சொன்னார்.

உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு பயன் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மேல் முறையீட்டு நடவடிக்கை அமைவதாக அவர் சொன்னார்.

தற்போது உதவி பெறுவோர் தொடர்ந்து உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக மக்கள் பரிவு உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்காக கூடுதலாக 210 கோடி வெள்ளி பெமெர்க்காசா பிளஸ் திட்டத்தின் வழி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

விண்ணப்பதாரர்கள் https://bpr.hasil.gov.my  எனும் அகப்பக்கம் வாயிலாக மேல் முறையீடு செய்யலாம். மேலும் 2021 ஆம் ஆண்டு பி.பி.ஆர். பாரங்களை உள்நாட்டு வருமான வரி கிளை அலுவலகங்களில் யு.டி.சி எனப்படும் நகர உருமாற்ற மையங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.


Pengarang :