SELANGOR

இலவச கல்விக்கு யுனிசெல்லை தேர்ந்தெடுங்கள் !!!

பெஸ்தாரி ஜெயா , மே 27:

டெர்மாசிஸ்வா திட்டத்தின் கீழ் இலவச கல்வியை சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யுனிசெல்) நூர் ஆயிஷா அத்திக்கா முகமட் கையிரி (வயது 19) மேற்கொண்டு வருகிறார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கும் யுனிசெல் மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருவதாக ஆயிஷா தெரிவித்தார்.

”  யுனிசெல்லில் இலவச கல்விக்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடனுதவியோ அல்லது வட்டியோ கிடையாது. இது என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,” என்று ஆயிஷா சிலாங்கூர் இன்றுக்கு  தெரிவித்தார்.

நூர் ஆயிஷா, ஜூன் 2018-இல்  யுனிசெல் வழங்கிய 350 இலவச கல்விக்கு தகுதி பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆவார்.

 

 

 

 

 

கல்வியில் சிறந்து விளங்க யுனிசெல் இலவச கல்வி வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாக வி.பாரதி (வயது 18) கூறினார்.

”  யுனிசெல்லில் இலவச கல்வி மட்டுமில்லாமல் மாதந்தோறும் ரிம 500 அலவன்ஸ் வழங்கப் படுகிறது. இந்த வேளையில் யுனிசெல் மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மற்ற பொது பல்கலைக் கழகங்களில் இப்படி ஒரு வாய்ப்பு இல்லை. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று பாரதி கூறினார்.

 


Pengarang :