NATIONAL

சுங்கத்துறை, வணிகர்களை விலை குறைக்குமாறு வேண்டுகோள்

எதிர் வரும் 2018 ஜூன் முதல் தேதியில் பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பூஜியமாக (0%) மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ஜிஎஸ்டி ஆறு சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசிய அரச சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ சுப்பிரமணியம் துளசி கூறுகையில், ஜிஎஸ்டி பதிலாக விற்பனை வரி மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அறிமுகப்படுத்தும் என்று கூறினார். ஆனாலும் , அதன் அமலாக்கம் நாள் பின்பு அறிவிக்கப்படும் என்று விவரித்தார்.

”  ஜிஎஸ்டிக்கு பதிவு செய்த வணிகர்கள் இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஜிஎஸ்டி அகற்றப்படும் வேளையில், வணிகர்கள் தங்களின் பொருட்களின் விலையை குறைக்க முடியும்,” என்று தமது அறிக்கையில் சுப்பிரமணியம்  குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :