NATIONAL

இரண்டு வாரங்களில் முழு அமைச்சரவை அறிவிக்கப்படும்

ஷா ஆலம் , மே 28:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இரண்டு வாரங்களில் மேலும் சில அமைச்சர்களை நியமித்து தனது முழு அமைச்சரவையை பூர்த்தி செய்வார் என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் நியமனம் செய்யப்பட உள்ளது மிகவும் சவாலானது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் நான்கு உறுப்புக் கட்சிகள் உள்ளதால் இது மிகவும் கடினமான ஒன்று என்றார்.

”  நான்கு உறுப்புக் கட்சிகளுக்கும் நீதியான முறையில் பிரித்துக் கொடுக்க வேண்டும். எந்தந்த அமைச்சு, எந்த கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று தீர யோசிக்க வேண்டி இருக்கிறது. மலேசியாவில் இனரீதியாக, மாநிலங்கள் வாரியாக அனைத்து கட்சிகளும் சரிசமமாக அமைச்சுகளை நியமனம் செய்யப்பட வேண்டும். 1981-இல் நான் பிரதமராக இருந்தபோது அமைச்சர்களை நியமனம் செய்வது மிகவும் சுலபம், ஏனெனில் எல்லாமே அம்னோ கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பர்,” என்று தெ எட்ஜ் மார்கெட் இதழுக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறினார்.


Pengarang :