SELANGOR

செலவீனங்களை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வதில் கவனம் !!!

ஷா ஆலம் , மே 29:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் புதிய மத்திய அரசாங்கம் செலவீனங்களை குறைக்க சில அரசியல் சார்ந்த இலாகா மற்றும் நிறுவனங்களை கலைத்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு செய்யவே ஆகும் என்று சிலாங்கூர் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கிராமப்புற & பாரம்பரிய கிராம மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். இந்த நடவடிக்கையின் மூலம் இதன் நிதி ஒதுக்கீடுகளை முக்கியமான மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன் படுத்தலாம் என்றார்.

 

”  புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சியில், பாக்காத்தான் மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியது நாட்டின் நன்மைக்காகவே. இதற்கு முன்பு பல்வேறு தரப்பினர் பிரதமர்துறை இலாகாவிற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அதே நேரத்தில் சுகாதாரம் , கல்வி மற்றும் முக்கிய அமைச்சுகளுக்கு நிதி குறைக்கப்பட்டது. பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சொன்னது போல, தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் செலவீனங்களை குறைக்க வழிகள் தேட வேண்டும், மாறாக பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. நாட்டின் வளங்களை திறன்மிக்க முறையில்  நிர்வாகம் செய்து உள்நாட்டு மற்றும் அனைத்துலக ரீதியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

 

சுங்கை துவா சட்ட மன்ற உறுப்பினருமான அமிரூடின் ஷாரி மேலும் கூறுகையில், பிரதமரின் அதிரடி நடவடிக்கையினால் மிகப்பெரிய அளவிலான நிதியை சேமிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :