SELANGOR

மந்திரி பெசார் வழியில் நிதிகளை நிர்வாகம் செய்ய வேண்டும்..

ஷா ஆலம் , மே 29:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, மாநில அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை செவ்வனே வழி நடத்தி வருகிறார். நிர்வாகச் செலவுகளை குறைத்து மேம்பாடுகளுக்கு அதிக நிதிகளை ஒதுக்கீடு வழங்கி வந்துள்ளார் என்று இளையோர் மேம்பாடு, விளையாட்டு, தொழில் முனைவர் மேம்பாடு, கிராமப்புற மற்றும் பாரம்பரிய கிராம ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையினால் மாநிலம் அபரீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.

சிலாங்கூர் மாநிலத்தின் நடைமுறையை மத்திய அரசாங்கம் பின்பற்ற வேண்டும். மேம்பாட்டு திட்டங்களுக்காக அதிகமாக நிதியை ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

” எடுத்துக்காட்டாக, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி 2018-இன் வரவு செலவு திட்டத்தில் 53.2%-ஐ மேம்பாட்டு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் மாநில வருவாய் அதிகரிக்கும். அதே வேளையில் , முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் 2018-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 83.59% நிர்வாக செலவீனங்களுக்கு ஒதுக்கினார். அது மட்டுமல்லாமல், 6.2% பிரதமர்துறை இலாகாவிற்கு நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ளார்,” என்று விவரித்தார்.


Pengarang :