SELANGORUncategorized @ta

மந்திரி பெசாரை போல் விவேகமாய் நிதி பரிவர்த்தனைகளைப் பின்பற்றவும்!!

ஷாஆலம், மே 30:

சிலாங்கூர் மாநிலத்தை சிறந்த மேம்பாட்டிற்கு இட்டுச் செல்ல மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மேற்கொண்ட விவேகமான நிதி பரிவர்த்தனைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என மாநில இளைஞர்,விளையாட்டு,தொழில்முனைவர் மேம்பாடு,கிராம மேம்பாடு,பாரம்பரிய கிராம பாதுகாப்பு துறை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமிருடின் சாஹாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டிற்கும் இம்மாநிலத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் பங்களிப்பு என்பது பெருமிதமானது.அவரை முன்மாதிரியாக கொண்டு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தத்தம் கடமையினை செம்மையாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் விவரித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றியதை போலவே நாட்டின் பொருளாதாரத்தையும் அஸ்மின் அலி சிறந்த நிலைக்கு உயர்த்துவார் என நம்பிக்கை தெரிவித்த அமிருடின் சஹாரி நாம் அனைவரும் அவரை முன்மாதிரியாக கொண்டு மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
உதாரணத்திற்கு சொன்னால் போனால் சிலாங்கூர் மாநிலத்தின் பட்ஜெட்டில் மேம்பாட்டிற்காக அஸ்மின் அலி ஒதுக்கிய 53.2 விழுகாடு பட்ஜெட் சிலாங்கூரின் மேம்பாட்டிற்கும் பொருளாதார உயர்விற்கும் பெரும் பங்காற்றியதோடு வெளிநாட்டு முதலீடுகளையும் அஃது வெகுவாக கவர்ந்தது என்றார்.அதன் மூலம் மாநிலத்தின் வருமானமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் நினைவுறுத்தினார்.
இதற்கிடையில்,2018ஆம் ஆண்டுக்கான மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 83.59 விழுகாடு வெறும் செயல்பாடுகளுக்கும் 6.2 விழுகாடு ஒதுக்கீடு பிரதமர் துறை இலாகாவிற்காக ஒதுக்கியது அவரது நிர்வாகத்திறன் அற்ற போக்கின் வெளிப்பாடு என்றும் அஃது விவேகமற்றது என்றும் அமிருடின் சாடினார்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை பின்பற்றி ஒவ்வொருவரும் நிதிநிலையை நிர்வாகித்தால் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலையை சரியான இலக்கிற்கு கொண்டு செல்வதோடு பொருளாதார நிலையிலும் மேம்பாடும் வளர்ச்சியும் காண முடியும் எனவும் அவர் நம்பிக்கையோடு குறிப்பிட்டார்.


Pengarang :