NATIONAL

மலேசிய நாட்டின் முழு அமைச்சரவை இவ்வாரம் பூர்த்தியாகும்?

ஷா ஆலம், ஜூன் 4:

நாட்டின் முழு அமைச்சரவை இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசீன் கூறினார். தற்போது மலேசிய அரசாங்கம், அமைச்சரவையை நியமனம் செய்ய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக முஹிடின் யாசீன் கூறினார்.

” முழு அமைச்சரவை இந்த வாரம் முழுமை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த நாள் என்பது எனக்கு தெரியாது. நாம் கொஞ்சம் பொறுத்து இருக்க வேண்டும்,” என்று ஹாரியான் மெட்ரோவிடம் தெரிவித்தார்.


Pengarang :