NATIONAL

பாக்காத்தான் அரசாங்கத்தினர் பரிசுப் பொருட்கள் வாங்கும் நடைமுறையை பின்பற்றக்கூடாது !!!

புத்ரா ஜெயா, ஜூன் 8:

நாட்டின் தலைமைத்துவத்தை கையில் எடுத்த பின் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் பரிசுப் பொருட்களை வாங்கும் நடைமுறையை பின்பற்றக்கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இந்த நடவடிக்கை, பொதுச் சேவையில் லஞ்சம் மற்றும் நிர்வாக தவறுகள் ஏற்படாமல் இருக்க உறுதி செய்யும் என்றார்.

”  என்னிடம் பரிசுப் பொருட்களை வழங்கினால் நான் பெற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் மலர்கள், உணவு மற்றும் பழங்கள் பரவாயில்லை. வாகனங்கள் கூட நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது உயர் அரசாங்க அதிகாரிகளுக்கும் பொருந்தும். பரிசுப் பொருட்களை கொடுப்பவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அரசாங்க நிர்வாக செயல்பாடுகள் மீதான அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் பேசினார்.

 

 

 

 

 

 


Pengarang :