SELANGOR

பெடுலி சேஹாட் திட்டத்தை புத்ரா ஜெயா அரசாங்கம் நிறைவேற்ற சிலாங்கூர் உறுதுணையாக இருக்கும்

ஷா ஆலம் , ஜூன் 9:

மலேசியா முழுவதும் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசாங்கத்திற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்று மாநில சுகாதாரம், சமூக நலம், குடும்ப மற்றும் மகளிர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாமூட் தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள பெடுலி சேஹாட் திட்டம் மலேசிய முழுவதும் அமல்படுத்தி வெற்றி அடையும் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.

”  சிலாங்கூர் மாநில அரசாங்கம், தேசிய அளவில் சமூக நலன் கருதி மாநிலத்தின் திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்படும் நடவடிக்கையை வரவேற்கிறது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தில் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தை சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வருகிறது. ஆகவே , சிலாங்கூர் மாநிலம், இத்திட்டத்தின் அனுபவங்களை மத்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து நாட்டின் அனைத்து மலேசியர்களும் பயனடைய வழிவகுக்கும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :