NATIONAL

6 நட்புமுறை ஆட்டங்கள் ஹாரிமாவ் மலாயாவை வலுப்படுத்தும் !!!

ஷா ஆலம், ஜூன் 10:

மலேசியா கால்பந்து சங்கம் (எப்ஃஏஎம்) 2018-ஆம் ஆண்டின் சுஸுகி கிண்ண ஆசியான் கால்பந்து போட்டிக்கு தேசிய கால்பந்து அணியை தயார் படுத்தும் வகையில் ஆறு நட்புமுறை ஆட்டங்களை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று எப்ஃஏஎம்-இன் தலைமைச் செயலாளர் டத்தோ ஹாமிடின் முகமட் அமீன் தெரிவித்தார். தரமான ஆட்டங்களை எதிர் வரும் ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நடக்கும் சூழ்நிலையில், இது சிறந்த களமாக இருக்கும் என்று தலைமை பயிற்சியாளர் டான் செங் ஹோ உறுதி அளித்தார்.

 

 

 

 

 

 

”  இந்த ஆறு நட்பு முறை ஆட்டங்கள் மலேசிய கால்பந்து அணியின் தற்போது இருக்கும் 171 தரவரிசை பட்டியலில் மேலும் வலுப்படுத்தும். அது மட்டுமல்லாமல் எதிர் வரும் நவம்பர் 8-இல் இருந்து டிசம்பர் 15-வரை நடக்கவிருக்கும் சுஸுகி கிண்ண போட்டிக்கு தயாராகும் நல்ல ஒரு தளமாக இது அமையும். நமது ஏற்பாடுகள் ஹாரிமாவ் மலாயா அணியின் ஆட்டத்தை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும்,” என்று அமினுடின் கூறினார்.


Pengarang :