SELANGOR

உடல் நலமற்ற நிலையில் என்னை யாரும் பார்க்ககூடாது – மனைவியிடம் கூறிய சுஹாய்மி

சா ஆலாம்,ஜூலை 03:

உடல் நலமற்ற நிலையில் என்னை யாரும் பார்க்ககூடாது என்பதற்காகவே தனக்கு உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருப்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என மறைந்த சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சஃபி தன்னிடம் கூறியதாக அவரது துணைவியார் ஜமிலா சாஹாக் (44 வயது) தெரிவித்தார்.

தன் உடல்நிலை குறித்த விடயத்தை ரகசியமாய் வைக்கும் படி அவர் கூறியதாக அவர் மேலும் கூறினார்.சுஹாய்மி சாஃபி இறப்பதற்கு முன்னதாக சுமார் ஒருமாதக் காலம் சுபாங் ஜெயா தனியார் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கணவருக்கு உண்டாக நோய் மிகவும் கடுமையானது என்றும் அதனை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றும் மருத்துவர் கூறியதாக குறிப்பிட்ட அவர் தன் கணவரின் உடலில் கிருமிகள் வேகமாய் பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியதையும் கண்ணீரோடு பகிர்ந்துக் கொண்டார்.
இருப்பினும்,சம்மதப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட தன் கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டதாகவும் கூறிய சுஹாய்மியின் துணைவியார் அவரை மருத்துவர்கள் இயல்பான வார்டில் வைத்துதான் சிகிச்சை அளித்தனர்.அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என பெரும் நம்பிக்கையோடு இருந்த வேளையில் அவரது திடிர் மரணம் பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளித்ததாக அவர் கூறினார்.

பின்னர் திடிர் என அவரது உடல்நிலை மீண்டும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மூச்சு விடுவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கிய தன் கணவர் எங்களை விட்டுப் போனது பெரும் துயரம் நிறைந்தது என்றார்.இதற்கிடையில்,சுஹாய்மியின் சகோதரர் சம்சூடின் கூறுகையில் சுஹாய்மியின் இறப்பு எங்களின் குடும்பத்திற்கு பெரும் இழப்பு என்றார்.நாங்கள் இருவரும் ரொம்ப நெருக்கமாக பழகியவர்கள்,அவர் இல்லாமல் இனி என் பயணம் சிக்கல் நிறைந்ததுதான் என்றார்.

காலமான சுஹாய்மி சாஃபியின் நல்லுடல் செக்ஸன் 21இல் உள்ள இஸ்லாமிய இடுகாட்டில் மாலை மணி 4.30 அளவில் புதைக்கப்பட்டது.அவர் சிகிச்சை பயனளிக்காமல் 2ஆம் தேதி சுபாங் ஜெயா தனியார் மருத்துவ மையத்தில் காலை மணி 11.10க்கு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :