SELANGOR

மரியாதை நிமித்தமாக மந்திரி பெசாரை ஊழல் தடுப்பு ஆணையம் சந்தித்தது

சா ஆலாம்,ஜூலை03:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெளிப்படையான மற்றும் ஒருமைப்பாடும் மிக்க மாநில அரசாங்கமாய் தொடர்ந்து நிலைக்கொள்ளும் என மாநில மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி தெரிவித்தார். இந்த நிலைப்பாட்டிலும் கொள்கையிலும் மாநில அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் இம்மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு துளியும் இடம் அளிக்க மாட்டோம் என்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்,சிலாங்கூர் அரசாங்கம் வெளிப்படையான போக்கினை கடைபிடிப்பதோடு லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத மாநிலமாக செயல்படுவதை மாநில அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார்.ஊழல் தடுப்பு ஆணையத்தினர் மரியாதை நிமித்தமாக மந்திரி பெசாரை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
டத்தோ அலியாஸ் சலிம் தலைமையிலான ஊழல் தடுப்பு ஆணையத்தினர் மந்திரி பெசாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் சிலாங்கூர் மாநிலத்தை இதே கோட்பாட்டின் கீழ் முன்னோக்கி கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,சிலாங்கூர் மாநில சுல்தான்,சுல்தான் சராஃபுடின் இட்ரிஸ் சிலாங்கூர் மாநில தலைவர்கள் தூய்மையான மற்றும் வெளிப்படையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையும் மந்திரி பெசார் நினைவுக்கூர்ந்தார்.


Pengarang :