SELANGOR

ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் தொடர்ந்து வலுப்பெறும் – மந்திரி பெசார்

சா  ஆலாம்,ஜூலை04:

சிலாங்கூர் மாநில அரசிற்கும் மாநில போலிஸ்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் தொடர்ந்து வலுப்பெறும் என்றும் அஃது இம்மாநிலத்தின் பாதுகாப்பிற்கும் சுபிட்சத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் என்றும் மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி நம்பிக்கை தெரிவித்தார்.
இருதரப்பிற்கு இடையிலான நன் உறவும் ஒற்றுமையும் இம்மாநிலத்தின் பாதுக்காப்பிற்கு மட்டுமின்றி மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் எனவும் கூறிய மந்திரி பெசார் மாநில போலீஸ் துறையின் செயல்பாடுகளும் அவர்களின் நடவடிக்கைகளும் நடப்பியல் சூழலில் நிறைவாகவும் சிறப்பாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றவியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சிலாங்கூர் மாநில காவல்படை தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் முன் வைத்த திட்டங்களும் செயல்பாடுகளும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதையும் சுட்டிக்காண்பித்த மந்திரி பெசார் காவல்துறைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் வசதிகளையும் மாநில அரசு நன்முறையில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும்,மாநில காவல்துறை கொண்டிருக்கும் செயல்பாடுகளும் திட்டங்களும் இம்மாநிலத்தி குற்றவியலை தடுப்பதோடு மட்டுமின்றி மாநிலத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் மிக்கதாய் அமைந்திருப்பதாகவும் அஃது நிறைவான ஒன்றாக அமைந்திருப்பதாகவும் மந்திரி பெசார் விவரித்தார்.

விவேகமான மாநிலமாக சிலாங்கூரை பாதுகாப்பு மற்றும் குற்றவியல் தொடர்பில் உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வ செயல்வடிவங்கள் அவசியம் என்றும் அதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது விவேகமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், சிலாங்கூரில் அமைந்திருக்கு மாநில காவல்துறை தலைமையகம்,மாவட்டம் மற்றும் ஒவ்வொரு காவல்நிலையமும் கவனத்தில் கொள்ளப்படுவதோடு அதன் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து அதன் பங்களிப்பினை வழங்கிடும் என்றும் உறுதி அளித்தார்.


Pengarang :