SELANGOR

தாமான் எங் ஆன் :ரசாயன தூய்மைக்கேடு இரு நாள்களில் தூய்மைப்படுத்தப்படும்!

ஷா ஆலம், மார்ச் 15-

கிள்ளான் தாமான் எங் ஆன் சுற்றுப் பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் படிந்துள்ள ரசாயன கழிவுகளை அகற்றும் பணியைத் துரிதமாக மேற்கொள்ளவும் அப்பணிகளைக் கண்காணிக்கும்படியும் மாநில பேரிடர் பிரிவுக்கு மாநில அர்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலாங்கூர் குடிநீர் நிர்வாக வரியம் (லுவாஸ்), கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிபிகே) மற்றும் சிலாங்கூர் சுற்றுச் சூழல் இலாகா ஆகிய அமைப்புகளும் இந்த நடவடிக்கையை இன்னும் இரண்டு நாள்களில் பூர்த்தி செய்ய ஒத்துழைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளன என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“சுற்றுப் புறப் பகுதியில் வாழும் மக்களுக்கு எந்தவோர் அசம்பாவிதமும் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், இந்த ரசாயன தூய்மைக்கேட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளும்படி அனைத்து தரப்புகளுக்கும் நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என்று அமிருடின் கூறினார்.

நேற்றிரவு 8 மணிக்கு லூவாஸ் அதன் பணியைத் தொடங்கிட்ட வேளையில், தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள குத்தகையாளர் நிறுவனம் இன்னும் இரு தினங்களில் ஏற்பட்டுள்ள தூய்மைக்கேட்டை முழுமையாக அகற்றிவிடும் என்றும் அவர் சொன்னார்/


Pengarang :