SELANGOR

தேவைப்படுவோருக்கு ஆடைகளை வழங்கி உதவுவீர்!

ஷா ஆலாம், மே 14

நோன்புப் பெருநாளையொட்டி 2.0 பெருநாள் ஆடை திட்டத்தின் வாயிலாக தேவைப்படுவோருக்கு ஆடைகளை வழங்கி உதவும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்நடவடிக்கையானது ஆடைகள் வாங்க இயலாத வசதி குறைந்தோரின் சுமையைக் குறைக்க உதவும் என்று புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி தெரிவித்தார்.
ஏழை எளியோருக்கு உதவுவதை ஊக்குவிக்கும் ரமலான் மாதத்திற்குப் பொருத்தமான வகையில் இந்நடவடிக்கை அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.
“இரண்டாவது முறையாக எனது சமூக சேவை மையம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார் அவர்.
” பெண்கள், சிறார்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் பொருத்தமான ஆடைகளை பொது மக்கள் வழங்குவதற்கான சரியான தடம் இது” என்று ஜூவாய்ரியா விவரித்தார்.

” ஏழை எளியோரின் துயரைப் போக்கும் இந்த நோன்பு மாதத்தில் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் கூறினார்.


Pengarang :