SELANGOR

நெகிழி பைகளுக்கான கட்டண வசூலிப்பு மாநில அரசு ஏற்பது குறித்து ஆலோசனை

கோம்பாக், மே 16-

சில்லறைப் பொருட்களை வாங்கும் பயனீட்டாளர்களிடம் நெகிழி பைகளுக்காக 20 காசை வசூலிக்கும் பொறுப்பை கடைக்காரர்களிடம் இருந்து மாநில அரசு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலிகப்பட்டு வருகிறது.

இதன் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் வர்த்தகர்களிடம் இருந்து நெகிழி பைகளுக்கான காசை வசூலிக்கும் நடவடிக்கைக்கு ஊராட்சி துறை பொறுப்பேற்கும் என்று சுற்றுச் சூழல், பசுமைத் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.

தற்போது வசூலிக்கப்படும் நெகிழி பைகளுக்கான பணத்தை வர்த்தகர்கள் சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளதால், இந்த புதிய நடைமுறை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

“இந்தத் திட்டத்தின் அமலாக்க முறை குறித்த ஆய்வு நடவடிக்கை முடிவுற்றதும் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இது அமல்படுத்தப்படும்” என்றார் அவர்.


Pengarang :