KUALA LUMPUR, 5 Okt — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad (tiga, kanan) ketika tiba pada majlis pelancaran Wawasan Kemakmuran Bersama 2030 di Pusat Konvensyen Kuala Lumpur hari ini.?Turut hadir Menteri Hal Ehwal Ekonomi Datuk Seri Mohamed Azmin Ali.?–fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA??KUALA LUMPUR, Oct 5 — Prime Minister Tun Dr Mahathir Mohamad (third, right) arrives at the launch of the Shared Prosperity Vision 2030 at the Kuala Lumpur Convention Centre today.?Also present Economic Affairs Minister Datuk Seri Mohamed Azmin Ali.?–fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
NATIONALRENCANA PILIHAN

எதிர்க்கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கை கூட்டணிக்கு ஆர்வமில்லை!

கோலாலம்பூர் , அக்.8:

ஓர் அம்னோ தலைவர் கூறியதுபோல் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆர்வமில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

“புதிய அரசாங்கத்தை அமைப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. இந்நாடு பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். நாடு சுதந்திரமடைந்தது அரசாங்க அமைச்சரவையில் பல்லினங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகித்து வந்துள்ளனர்” என்று அக்கூட்டணியின் தலைவருமான மகாதீர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலாய் மற்றும் இஸ்லாத்தின் நிலைத்தன்மைக்காக தேசிய முன்னணி, பாஸ் மற்றும் சபா,சரவாக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான் துன் மகாதீருக்கு ஓர் அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
“உண்மையில், இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் உரிமை உண்டு” என்று பார்ட்டி பிரிபூமி தலைவருமான மகாதீர் கருத்துரைத்தார்.


Pengarang :