Kesemua pelajar sekolah menengah dan rendah yang memenangi anugerah bagi setiap kategori
PBTSELANGOR

ஃபிரேஸர் அண்ட் நீவ் & எம்பிஎஸ்ஜே மறு சுழற்சி இயக்கம்: 78,546.71 கிலோ கிராம் பொருட்கள் சேகரிப்பு

சுபாங் ஜெயா, அக். 7-

சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்ஜே) தலைமையில் கடந்த மார் ச் முதல் தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெற்ற கூட்டு துப்புரவு நடவடிக்கையில் இங்குள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 78,546.71 கிலோ கிராம் மறுசுழற்சி பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

ஃபிரேஸர் அண்ட் நீவ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட மறு சுழற்சி இயக்கத்தின் வழி கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட 1832812 கிலோகிராம் பொருட்களைக் காட்டிலும் இவ்வாண்டு நான்கு மடங்கு அதிகமான பொருட்கள் சேகரிப்பட்டன என்று எம்பிஎஸ்ஜே தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.

“இவ்வியகத்தில் கடந்தாண்டு 27 பள்ளிகள் பங்கேற்ற வேளையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 47 பள்ளிகளாக உயர்ந்தது” என்றார் அவர். இவ்வியக்கம் இவ்வாண்டு அடைந்த வெற்றியானது சுற்றுச் சூழலைப் பேணுவது மீதான மக்களின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதையும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் மக்கள் கொண்டுள்ள கடப்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :