SELANGOR

வேலையிட பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவீர்! சிறு நடுத்தர தொழில்துறைக்கு அரசு கோரிக்கை

ஷா ஆலம், அக்.8-

வேலையிட விபத்துகளின் விகிதாச்சாரத்தை குறைக்க அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் திட்டத்தில் பங்கேற்பதோடு அந்நடைமுறைகளை ஒருங்கிணைப்பதிலும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாநில அரசு கேட்டுக் கொண்டது.

சிறு மற்றும் நடுத்த தொழில்துறையில் வேலையிட பாதுகாப்பு சுகாதாரத் தரத்தை உயர்த்தும் ஒரு நடவடிக்கையாக வேலையிட பாதுகாப்பு மர்றும் சுகாதார இலாகா இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாக இளைய தலைமுறை மற்றும் விளையாடு, மனித வள மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒஸ்மான் கூறினார்.

இத்திட்டமானது சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதோடு இதை வலியுறுத்தும் 2016-2020 வியூகத் திட்டத்தை கடைபிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

2017ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 120 சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளன என்று முகமது கைருடின் தெரிவித்தார்.


Pengarang :