KUALA LUMPUR, 13 Jan — Reaksi Ketua Polis Negara Tan Sri Abdul Hamid Bador ketika bercakap pada sidang media di Ibu Pejabat Polis Bukit Aman hari ini. Beliau mengesahkan penahanan 17 individu dalam operasi di sebuah kondominium di ibu negara awal hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

காவல்துறை: எம்ஏசிசி வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

கோலா லம்பூர், ஜனவரி 21:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசிதலைமை ஆணையர் லத்தீபா கோயா, இந்த மாத தொடக்கத்தில் வெளிப்படுத்திய உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் யாரென்பதைஇந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நபர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகளை வழங்க காவல் துறையினர் அவர்களை அழைப்பார்கள் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.

உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன்அவர்கள் தங்கள் அறிக்கைகளை பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதிபத்திரிகையாளர் சந்திப்பில்முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான விசாரணை குறித்த உரையாடல்கள் பதிவுகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து கசிந்ததாகக் கூறி லத்தீபா வெளிப்படுத்தினார்.

நஜிப்பைத் தவிரஅவரின் மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர்முன்னாள் எம்ஏசிசி தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் மற்றும் இரண்டு வெளிநாட்டு நபர்கள் உட்பட பலரும் இப்பதிவுகளில் இடம் பெற்றிருந்தனர்.

#செல்லியல்


Pengarang :