Uncategorized @ta

ஸ்மார்ட் பேருந்து: அந்நிய நாட்டவர்களுக்கு ரிம 1 கட்டணம் ஒரு பாகுபாட்டு நடவடிக்கை அல்ல

சுபாங் ஜெயா, ஜன.21-

சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்தில் பயணம் செய்யும் அந்நிய நாட்டவர்களுக்கு 1 ரிங்கிட் கட்டணம் விதிப்பதற்கு பாகுபாடு என்ற அர்த்தம் இல்லை. மாறாக, வரி செலுத்தும் குடிமக்களுக்கு வழங்கப்படும் முன்னிரிமை ஆகும் என்று ஊராட்சி, பொது போக்குவரத்து மற்று புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

பொது மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் அந்நிய நாட்டவர்களுக்கான சேவை கட்டணம் குடிமக்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பது போலவே இந்நடவடிக்கையையும் கருத வேண்டும் என்றார் அவர். குடிமக்கள் வரி செலுத்துகின்றனர், எனவே அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

சட்டவிரோதமாகவும் விதி முறைகளைக் கடைபிடிக்கத் தவறியுள்ள தொழிற்சாலைகள் மீது மேற்கொள்ளப்படவிருக்கும் அமலாக்க நடவடிக்கை குறித்து யுஎஸ்ஜே 7இல் உள்ள பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் மேற்கண்டவாறு இங் உரையாற்றினார்.


Pengarang :