NATIONALRENCANA

மக்களின் ஆரோக்கியத்தை பேண சுகாதார அமைச்சு உறுதி!

புத்ராஜெயா, ஜன.27-

நோய் தடுப்பூசி மற்றும் உணவகங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிப்பதன் மூலம் 2020ஆம் ஆண்டில் மலேசியர்கள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ்வது மீது கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு உறுதி பூண்டுள்ளது.
2020ஆம் ஆண்டு தொடங்கிய தேசிய சிறார் தடுப்பூசி திட்டத்தின் மூலம் இவ்வாண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுக்கிப்ளி அகமது கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சிறாருக்கும் இந்தத் தொற்றுநோய் தடுப்பூசிகள் மூன்று முறை போடப்படும். இந்தத் தடுப்பூசி மருந்துகள் போதுமான கையிருப்பு உள்ளதை உறுதி செய்வதோடு இது குறித்து விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பயிற்சி உட்பட அனைத்தையும் அமைச்சு மேற்கொண்டு வருகிறது” என்றார் அவர்.

“சிகரெட் புகையானது சிறார், கர்ப்பினி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பங்கம் விளைவிப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடைவிதிக்கும் கொள்கையில் சுகாதார அமைச்சு உறுதியாக இருக்கிறது” என்று அவர் சொன்னார்.

ஆண்டுதோறும் வயது முதிர்ச்சியடைவதற்கு முன்னரே மரணமடையும் 890,000 பேரில் 10 நபர்களில் எழுவர் சிகரெட் புகையினால் பாதிப்புற்றவர்கள் என்று புள்ளி விவரம் காட்டுகிறது.


Pengarang :