Rahilah Rahmat berucap pada Majlis Perasmian Karnival Kuala Selangor Tahun 2019 MDKS di Dataran Melawati, Kuala Selango pada 19 Oktober 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI.
PBTSELANGOR

பிகேபி நடைமுறையை பின்பற்ற தவறினால் கடைகள் உடனடியாக மூடப்படும் – எம்டிகெஎஸ்

ஷா ஆலம், ஏப்ரல் 2:

பேரங்காடிகள், மினி மார்கெட் மற்றும் பலசரக்கு கடைகள் நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அப்படி தவறினால் தங்களது வணிகத்தை மூட நேரிடும் என கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்) எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து பிகேபி நடவடிக்கையை மதிக்காமல் செயல்பட்டு வந்தால் வணிக உரிமங்களை உடனடியாக ரத்து செய்யப்படும் என எம்டிகெஸ் தலைவர் ரஹீலா ரஹ்மாட் நினைவு படுத்தினார்.

” வணிகத் தளங்களின் நடவடிக்கைகளை தொடர்பில் பல்வேறு புகார்களை நாங்கள்  பெற்று வருகிறோம். சமூக 1 மீட்டர் இடைவெளி மற்றும் பலர் இன்னும் குடும்பங்களை கடைகளுக்கு கொண்டு வருவதாக தங்களுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பிகேபி நடைமுறைகளை நாம் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்,” என்று தமது அறிக்கையில் அவர் கூறினார்.


Pengarang :