Majlis Perbandaran Selayang (MPS)
PBTSELANGOR

சட்ட விரோத அந்நிய வணிகர்களின் 92 பொருட்களை எம்பிஎஸ் பறிமுதல் செய்தது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 8:

செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) இன்று செலாயாங் மொத்த சந்தை மையத்தில் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 92 சட்ட விரோத வணிகர்களின் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது என அதன் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஜுஹாரி அமாட் தெரிவித்தார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் இந்த சட்ட விரோத அந்நிய வணிகர்கள் தங்களது பொருட்களை விட்டு விட்டு சென்றது அசுத்தத்தையும் மற்றும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியதாக மேலும் குறிப்பிட்டார்.

” சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டு வரும் அந்நியர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாவுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்,” தமது அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :