Rahilah Rahmat (kanan) menyerahkan sumbangan kepada salah seorang pendayung sampan di Santuari Kelip-Kelip Kampung Kuantan pada 9 April 2020. Foto ihsan Unit Korporat dan Perhubungan Awam MDKS
PBTSELANGOR

35 படகுத்துறை ஊழியர்களுக்கு எம்டிகேஎஸ் உதவி

ஷா ஆலம், ஏப்.10-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை முன்னிட்டு கம்போங் குவாந்தான் கெளிப் படகுதுறையைச் சேர்ந்த 35 படகோட்டிகளுக்கு கோலாசிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகேஎஸ்) நேற்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கியது. கோவிட்-19 தொற்று காரணமாக செய்து வந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இந்த உதவி ஓர் ஆருதலாக இருக்கும் என்று எம்டிகேஎஸ் தலைவர் ராஹிலா ராஹ்மாட் கூறினார்.

அதே வேளையில், அந்த சுற்று வட்டாரத்தில் குடியிருக்கும் 140 எம்டிகேஎஸ் பணியாளர்களுக்கும் உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்றார் அவர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகள் வழங்குவதற்காக பல்வேறு தரப்புகளுடன் மன்றம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
தொற்று சம்பவத்தால் அல்லலுறும் தரப்பினருக்கு பண முடிப்பு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கி வரும் அரசு சாரா அமைப்புகளுக்கு இவ்வேளையில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ராஹிலா ராஹ்மாட் கூறினார்.


Pengarang :