Penjawat awam melakukan imbasan kod QR menggunakan sistem SELangkah (Langkah Masuk Dengan Selamat) ketika berada di Bangunan SUK Selangor, Shah Alam pada 14 Mei 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் செலாங்கா செயலியை பயன்படுத்தி உள்ளனர்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 28:

செலாங்கா செயலியை (பாதுகாப்பான முறையில் நுழைவோம்) நேற்று வரை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில சுகாதார இலாகா கோவிட்-19 தொற்று நோய் பரவலை கண்டறிய சிலாங்கூர் மாநிலம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியது என அவர் பெருமிதம் கொண்டார்.

” பேனா மற்றும் காகிதத்தை பயன்படுத்தி எழுதும் முறையை மாற்றி செலாங்கா செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் கோவிட்-19 தொற்று நோய் கொண்டவர்களை மிகச் சுலபமாக கண்டறிய இயலும். நேற்று வரை செலாங்கா செயலியை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்,” என்று தமது முகநூலில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.


Pengarang :