Orang awam diwajibkan memakai pelitup muka bagi mencegah penularan wabak Covid-19. Foto ASRISAPRIE SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கி அனைவரும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும்- இஸ்மாயில் சப்ரி

நாடாளுமன்றம், ஜூலை 22:

எதிர் வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, நெரிசலான பொது இடங்களிலும் பொது போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது மற்றும் மக்களின் மெத்தனப் போக்கு ஆகியவற்றினால், கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் பொது இடங்களில் முகக்கவரி அணிவது உட்பட அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் எஸ்ஓபி.-யைப் புறக்கணிப்பதையும் காண முடிவதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். பொது போக்குவரத்தில் முகக்கவரி அணிய வேண்டும். பேருந்து, எல்.ஆர்.டி., விமானம் ஆகியவற்றில் சமூக இடைவெளியின்றி, நெரிசலில் அமர்ந்திருந்தாலும் முகக்கவசம் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் அமல்படுத்தப்படுவதில்லை. எனவே, ஆகஸ்ட் முதலாம் தேதி முதல் நெரிசல் அதிகம் இருக்கும் பொது போக்குவரத்திலும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று எம்கேஎன்.-னின் சிறப்புக் கூட்டத்தில் அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.


Pengarang :