Dato’ Seri Amirudin Shari berucap ketika pelancaran jentera pilihan raya Angkatan Muda Keadilan (AMK) Selangor di Telok Panglima Garang, Kuala Langat pada 25 Julai 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALSELANGOR

அரசாங்கம் பல கடுமையான எஸ்ஓபிகளை அமல்படுத்த இருக்கிறது !!!

புத்ராஜெயா, ஜூலை 25

 

கடந்த சில தினங்களில் தொடர்ந்து கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து பல கடுமையான சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதோடு, ஜூலை 31-ஆம் தேதி கொண்டாடப்படும் தியாகத் திருநாளுக்கான எஸ்ஓபி குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார். தற்போது அதிகரித்து வரும் இப்பெருந்தொற்றை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது.

குறிப்பாக, சரவா மாநிலத்தில் பதிவாகியுள்ள 40-க்கும் மேற்பட்ட நோய் சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார். தியாகத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, எஸ்.ஓ.பி-யை பின்பற்றுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து, நாளை ஞாயிற்றுக்கிழமை தொழில்நுட்பக் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மூத்த அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். திங்கட்கிழமை அறிவிக்கப்படும் புதிய எஸ்ஓபி-யை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய தியாகத் திருநாள் முழுவதும் போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.


Pengarang :