LUMUT, 6 Jun — Sebuah Helikopter Super Lynx MK100 daripada Skuadron 501 berlepas dari kapal KD LEKIU bagi melaksanakan Op Benteng melalui ruang udara di sekitar perairan Selat Melaka Utara. Rondaan yang dilakukan Tentera Laut Diraja Malaysia (TLDM) bertujuan untuk mengekang kegiatan jenayah rentas sempadan Pendatang Asing tanpa izin (PATI), pelanunan, pemerdagangan manusia, penyeludupan dan pencerobohan nelayan asing dikhuatiri semakin meningkat akibat pandemik COVID-19. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

நாட்டின் எல்லைகளை பாதுகாக்க ஓப்ஸ் பெந்தேங் மேலும் கடுமையாக்கப்படும் !!!

புக்கிட் காயூ ஈத்தாம், ஜூலை 25:

சிறப்பு பணிப்படையின் (என்திஎப்) கீழ் மலேசிய ஆயுதப்படை மற்றும் தேசிய பாதுகாப்புப்படை தங்களது பலத்தை முழுமையாக பயன்படுத்தி ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில் ஈடுபட்டு மலேசிய-தாய்லாந்து எல்லைகளை பாதுகாக்க உறுதிப் பூண்டுள்ளது. கெடா மற்றும் பெர்லிஸ் எல்லைகளின் மூலம் மலேசிய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கும் அந்நியர்களை தடுதது நிறுத்தும் என ஆறாவது ராணுவப் படையினரின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் டத்தோ முகமட் ஹாலிம் காலிட் கூறினார்.

ராணுவப் படையினரின் முழு பலத்தையும் பயன்படுத்தி சட்ட விரோதமாக எலிப் பாதைகளில் நுழையும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடும் என அவர் உறுதியளித்தார். டிரோன் மற்றும் மலேசிய அரச காவல்துறையினருடன் விவரங்களை பகிர்ந்து கொண்டு எல்லைகளை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என முகமட் ஹாலிம் கூறினார்.


Pengarang :