Dato’ Seri Amirudin Shari berucap pada Konvensyen Penerangan KEADILAN di Hotel De Palma, Ampang pada 26 Julai 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALSELANGOR

மாநிலத்தில் எந்த இனமும் புறக்கணிக்கப் படவில்லை; மக்கள் கண்டிப்பாக புரிந்துக் கொள்வார்கள்- மந்திரி பெசார் நம்பிக்கை

அம்பாங், ஜூலை 26:

சிலாங்கூர் மாநிலத்தில் நிகழும்  மேம்பாட்டுத் திட்டங்களில் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் எந்த இனமோ அல்லது மதமோ புறக்கணிக்கப் படவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு ஒரு இனத்தின் ஆதரவு மிகவும் குறைந்துக் கொண்டு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றார் அவர். எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று உறுதி அமிருடின் ஷாரி உறுதி அளித்தார்.

” எந்த ஒரு தரப்பினரும் பொது மக்களிடம் அல்லது ஒரு இனத்தின் மட்டும் கருத்துக்கணிப்பு நடத்தலாம். ஆனாலும், மக்கள் நீதிக் கட்சியை (பிகேஆர்) பொறுத்த வரையில் நமது நோக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். சிலாங்கூரில் கட்சி மிகவும் பலமாக உள்ளது,” என்று அம்பாங் டி பால்மா இன் தங்கும் விடுதியில் நடைபெற்ற பிகேஆர் தகவல் பிரிவு மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.


Pengarang :