அம்பாங், ஜூலை 26:
கடந்த 10 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்தி வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வெளிப்படையாக நிர்வாகம் மற்றும் பொறுப்பான அரசாங்கத்தினால் மாநில கையிருப்பு வலுவாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” கடந்த ஆண்டில் சிலாங்கூர் மாநிலம் உள்நாட்டு உற்பத்தியில் முதல் இடத்தில் ரிம 17 மில்லியனை பதிவு செய்துள்ளது. மற்றொரு பாக்காத்தான் மாநிலமான பினாங்கு ரிம 16.9 பில்லியனுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், நிர்வாகத்தில் எந்த ஒரு குளறுபடிகள் இல்லை, எந்த ஒரு குறுக்கீடுகள் கிடையாது. இதுவே, எங்களின் வெற்றிக்கு காரணம்,” என்று டி பால்மா இன் தங்கும் விடுதியில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்ட போது இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.