PUTRAJAYA, 28 Julai — Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin pada Majlis Pelancaran Bulan Kebangsaan dan Kibar Jalur Gemilang 2020 di Bangunan Perdana Putra hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA PUTRAJAYA, July 28 — Prime Minister Tan Sri Muhyiddin Yassin during the launching of the National Month and Fly the Jalur Gemilang campaign at Perdana Putra Building today. –fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
NATIONAL

தேசியக் கொடியை அனைவரும் பறக்க விடுவோம்- பிரதமர்

புத்ராஜெயா, ஜூலை 28:

நாட்டின் சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவித்து வரும் மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில், தேசியக் கொடியை பறக்கவிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் கேட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டின் அடையாளத்தை உள்ளடக்கிய துண்டு துணியாக மட்டும் இல்லாமல், தேசிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக தேசிய கொடி விளங்குவதாகவும் பிரதமர் கூறுகிறார்.

“தேசிய மாதம் மற்றும் ஜலோர் கெமிலாங் கொண்டாட்டத்திற்காக காத்திருக்காமல், ஆண்டு முழுவதும் திறந்த மனதுடனும் பெருமையுடனும் ஜலோர் கெமிலாங்கை நாம் அனைவரும் பறக்க விடுவோம்.” என்றார் அவர். தேசியக் கொடியான ஜலோர் கெமிலாங் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகும், தேசிய சின்னத்தை உள்ளடக்கிய ஒரு துண்டுத் துணியாக இதைக் கருத வேண்டாம்.

இதனிடையே, இந்த சுதந்திர மாதக் கொண்டாட்டத்துடன் இணைந்து தேசியக் கொடியை அவரவர் வீடுகள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வாகனங்களில் மலேசியா மீதான அன்பின் அடையாளமாக பறக்கவிட வேண்டும் என்றும் முகிடின் கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், மக்களின் தேசப்பற்றின் உணர்வை ஊக்குவிப்பதற்காக தேசிய மாதம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளில் சமூகத்தின் தீவிர பங்களிப்பை வழங்குமாறு அமைச்சர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :