KOTA KINABALU, 30 Julai — Ketua Menteri Sabah Datuk Seri Mohd Shafie Apdal ketika mengadakan perjumpaan dengan Ahli Dewan Undangan Negeri Sabah yang masih bersamanya di Pusat Pentadbiran negeri Sabah (PPNS) sebelum mengadakan satu sidang media di sini hari ini. Terdahulu beliau mengadap Yang Dipertua Negeri Sabah Tun Juhar Mahiruddin di Istana Negeri, di sini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை எஸ்பிஆர் பெற்றுள்ளது !!!

புத்ராஜெயா, ஜூலை 31:

சபா மாநில சட்டமன்றம் நேற்று வியாழக்கிழமை கலைக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, எஸ்.பி.ஆர். எனப்படும் தேர்தல் பொருப்பான்மை குழு பெற்றிருக்கிறது. சபா மாநில அரசியலமைப்பு சட்டம் 21 உட்பிரிவு நான்கின் கீழ், சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாள் முதல் 60 நாட்களுக்குள் தேர்தல்  நடத்தப்பட வேண்டும்.

அம்மாநில தேர்தல் குறித்து, தமது தரப்பு சிறப்புக் கூட்டம் ஒன்றை மேற்கொள்ளும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எஸ்.பி.ஆர். தெரிவித்திருக்கிறது. மாநில ஆளுநர் துன் ஜுஹார் மஹிரூடின்-னை சந்தித்த பின்னர், சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷாஃபி அப்டால் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.


Pengarang :