Uncategorized @ta

ம.இ.கா வின் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆதரவு அன்வாருக்கு இல்லையா?

ஷா ஆலம் அக் 14- இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வியாக்கியானம் ம.இ.கா  தலைவரிடமிருந்து அவசியமில்லை. அவர் கருத்து தெரிவிக்கும் முன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக்  கவனத்தில் கொண்டு கருத்துரைத்திருந்தால் போற்றத்தக்கதாக இருக்கும்.

இருப்பினும் அவர் முந்திக்கொண்டு கருத்து வெளியிட்டுள்ளது டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா வில் தனது நிலையைத் தற்காத்துக்கொள்ள இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்ததைக் காட்டுகின்றது. ம.இ.கா வின் துணைத்தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சரவணன் மட்டுமே, இப்பொழுது அக்கட்சியின் ஒரே நாடாளுமன்றப் பிரதி நிதியும் அமைச்சருமாகும்.  இது டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வகிக்கும் கட்சித்தலைவர் பதவிக்கு உள்ள ஆபத்தை உணர்த்துகிறது.

டத்தோ ஸ்ரீ சரவணனின் அமைச்சர் பதவி, கட்சித்தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மிரட்டலாக இருப்பதை நாடு அறியும். அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்குத் தனக்குக் கிடைத்துள்ள அறிய வாய்ப்பை டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் நன்கு பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்  என்பதையே இது காட்டுகிறது.

டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் கருத்து எந்த வகையிலும் டத்தோ ஸ்ரீ அன்வாரையோ, இந்தியச் சமுதாயத்தையோ பாதிக்காது. கடந்த பொதுத்தேர்தலில்  ம.இ.கா 2 நாடாளுமன்றத் தொகுதிகளில்  வெற்றிபெற்ற வேளையில் கெஅடிலான் கட்சியின் இந்திய வேட்பாளர்கள் 7 இடங்களை வெற்றி கொண்டுள்ளனர். ஆகவே. அவர் கருத்தைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவரும் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


Pengarang :